அமெரிக்கா எல்லை மீறிவிட்டது! பேச்சுவார்தையில் கலந்துகொள்ளபோவதில்லை என ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா எல்லை மீறிவிட்டது! பேச்சுவார்தையில் கலந்துகொள்ளபோவதில்லை என ஈரான் அறிவிப்பு

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக ஈரானியக் குழு பாகிஸ்தானுக்குப் பயணிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டது என்றும், அமெரிக்காவின் போர் நிறுத்த மீறல் குறித்து பாகிஸ்தான் மத்தியஸ்தருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஒரு அமைதியான நாடு என்றும், இராஜதந்திர செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதில் அமெரிக்கா அக்கறை காட்டவில்லை என்றும், அது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு போர் நிறுத்தத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் இஸ்மாயில் பாகாயி மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்மொழிவுகள் அற்பமானவை என்றும், அமெரிக்காவின் கோரிக்கைகள் யதார்த்தமற்றவை என்றும் இஸ்மாயில் பகாய் கூறியுள்ளார்.

ஈரான் தனது கோரிக்கைகளைத் தெளிவாகக் கூறியுள்ளது, அவற்றை மாற்றிக்கொள்ளாது. ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் விடயத்தில், நாங்கள் காலக்கெடுவையோ அல்லது இறுதி எச்சரிக்கைகளையோ நம்புவதில்லை.

ஈரானிலிருந்து அணுசக்திப் பொருட்களை வெளியேற்றுவது பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை என்றும், தனது அணுசக்தி சாதனங்கள் நாட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதே ஈரானின் தெளிவான நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் மீது கடற்படை முற்றுகையை விதித்து அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகவும், கடற்படை முற்றுகையை விதித்து ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தற்போதைய போர் போன்ற சூழ்நிலை காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்தை ஒருதலைப்பட்சமாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, போர்நிறுத்தத்தையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாகும் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்கா அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை, அதன் விளைவுகள் ஒருபோதும் நல்லதாக இருக்காது.

முந்தைய பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா நம்மீது நடத்திய தாக்குதல்களை நம்மால் மறக்க முடியாது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு புதிய ஆக்கிரமிப்பைத் தொடங்க விரும்பினால், நமது ஆயுதப் படைகள் அதற்குப் பதிலடி கொடுக்கும், நமது தேசிய நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கும், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்பு ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக இருந்தது.

பாகிஸ்தானிய மத்தியஸ்தரின் விளக்கம் இருந்தபோதிலும், லெபனானில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று அமெரிக்கா கூறியது.

இந்தியக் கப்பல்கள் குறிவைக்கப்பட்டது குறித்து ஈரானிய நிறுவனங்கள் விசாரித்து வருகின்றன என்று இஸ்மாயில் பகாய் மேலும் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )