அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்

அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்

அரசாங்க அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள் (17) வழக்கம் போல் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ மற்றும் சிங்கள புத்தாண்டு காரணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று (15) முதல் பேருந்துகளை இயக்கத் தொடங்குவதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாணப் போக்குவரத்து அதிகாரசபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயல்திட்டப் பணிப்பாளர் ஷெரீன் அதுகொரலா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று ஒரு வழக்கமான அலுவலக நாள் என்பதால், அலுவலக இரயில் சேவைகள் வழக்கம் போல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவையின் அடிப்படையில் உரிய இரயில்கள் சேவையில் இணைக்கபட்டுள்ளதாக இரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )