விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான இந்தியர்

விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான இந்தியர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 02 கோடியே 08 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் இன்று
கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இந்தப் போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்துள்ளார். பின்னர் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது  பயணப் பொதியில் 02 கிலோ 87 கிராம் நிறையுடைய  குஷ் ரக போதைப்பொருள் கண்டறியப்பட்டது.

கைதானவர் 24 வயதுடைய இந்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த விமானப் பயணி மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )