கொழும்பில் கோர விபத்து – 15 பேர் படுகாயம்

கொழும்பில் கோர விபத்து – 15 பேர் படுகாயம்

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (11) காலை வெல்லம்பிட்டி பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மிதொடமுல்ல சந்திக்கும் இடையில் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள ஒரு வன்பொருள் கடையைச் சேர்ந்த மூன்று லொரிகள் இரவு நேரத்தில் கடையின் முன் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதிகாலையில் அதிவேகமாக வந்த பயணிகள் பேருந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொரியின் பின்புறத்தில் மோதியது. லாரி நிறுத்தப்பட்டிருந்த மற்ற மூன்று வாகனங்களின் மீது மோதியதில் நான்கு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

Share This