செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்

செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்

தொடர்ச்சியாக ஐந்து லீக் போட்டிகளில் ஏற்பட்ட  தோல்வியை தொடர்ந்து செல்சி அணி அதன் பயிற்சியாளர் லியாம் ரோசெனியரைப் பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஐந்தரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அணியில் இணைந்த ரோசெனியர்,  நான்கு மாதங்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரின் பயிற்சியின் கீள் விளையாடிய 23 போட்டிகளில் 11இல் மட்டுமே செல்சி அணி வெற்றி பெற்றிருந்தது.

செல்சி அணியின் 114 ஆண்டு கால வரலாற்றில், ஒரு கோல் கூட அடிக்காமல் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

பிரைட்டன் அணிக்கு எதிரான 1-0 என்ற கோல் கணக்கில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ரோசெனியர் தனது அணியின் வீரர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அணியின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அணியின் இணைப் பயிற்சியாளர் காலும் மெக்ஃபார்லேன், இந்தப் பருவம் முடியும் வரை இடைக்கால மேலாளராகப் பொறுப்பேற்பார் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரைட்டன் அணியுடன் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து செல்சி அணியின் சாம்பியன்ஸ் லீக் கனவுகள் மீண்டும் தகர்ந்துள்ளன.

இன்னும் நான்கு சுற்றுகளே மீதமுள்ள நிலையில், செல்சி அணி 48 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )