அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன நாளை மறுதினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மொஹான் கருணாரத்ன கைது செய்யப்பட்டார்.