அரச நிதியை திறமையாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டுமாறு ஜனாதிபதி கோரிக்கை

அரச நிதியை திறமையாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டுமாறு ஜனாதிபதி கோரிக்கை

மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், அரச நிதியை திறமையாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நிதியாண்டின் தொடக்கத்திலேயே அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிட்டு, அவற்றின் முன்னேற்றத்தை மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத செலவிடப்படாத நிதி ஒதுக்கீடுகள் பொதுத் திறைசேரிக்குத் திரும்பும் என்பதால், நிதியை உரிய முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கான உர மானியம் மற்றும் அடுத்த பெரும்போக அறுவடைக்கு முன்னர் களஞ்சியங்களில் உள்ள நெல் இருப்புகளை அகற்றுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

களஞ்சிய நெல்லை அரிசியாக மாற்றி நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது அல்லது கால்நடைத் தீவனமாக மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.

முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு வரிச் சலுகைகள் மட்டுமன்றி, முதலீட்டாளர்களுக்கு நிலங்களை விரைவாக வழங்கும் நடைமுறையும் அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்குவதற்கான நடைமுறைகள் சுமார் 18 மாதங்கள் வரை நீடிப்பதால், அரச நிலங்களை அடையாளம் கண்டு விரைவான ஒதுக்கீட்டு முறை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை, காப்புறுதி மற்றும் பரிவர்த்தனைத் துறைகளின் டிஜிட்டல் மயமாக்கல், கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பெறுமதி சேர் வரி பிரச்சினைகள் ஆகியவையும் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )