இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது –  மோடி

இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’ மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

லஷ்கர்-ஏ-தொய்பாவின் (Lashkar-e-Taiba) கிளை அமைப்பான TRF நடத்திய இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )