காதலர் தினத்துக்குப் பின்னால் இப்படியொரு கதை இருக்கிறதா?

காதலர் தினம் என்றாலே காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் பரிசில்களையும் பகிர்ந்துகொள்வதை பார்த்திருப்போம்.
அன்பானவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு பரிசில்களை வழங்கலாம் என்பதால் இதனை அன்பர்கள் தினம் எனவும் அழைக்கின்றனர்.
பொதுவாக உலகம் முழுவதிலும் பெப்ரவரி 14 ஆம் திகதி தான் வேலன்டைன் டே கொண்டாடப்படுகிறது. ஆனால், தென் கொரியர்கள் மட்டும் வருடத்தில் 12 வேலன்டை டேக்களை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் 14 ஆம் திகதி அவர்களுக்கு வேலன்டைன் டே தானாம்.
இந்த வேலன்டைன் டேவுக்கு பின்னால் ஒருவரின் வரலாறு உள்ளது.
இரண்டாம் கிளாடியஸ் எனும் மன்னர் ரோம் நகரை ஆட்சி செய்து வருகையில், அவரது இராணுவ வீரர்கள் பலரும் திருமணம் செய்யத் தொடங்கியதால் தங்கள் குடும்பத்தை அதிகம் நேசித்தனர். இதனால் இராணுவப் பணியில் இவர்களது கவனம் குறையத் தொடங்கியது.
இதனால், இராணுவத்தினர் யாரும் திருமணம் செய்யக் கூடாது என மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அக் காலத்தில் வேலன்டைன் எனும் பாதிரியார் அங்கு வாழ்ந்து வந்துள்ளார். அவர் மன்னருக்கு தெரியாமல் பல இராணுவத்தினருக்கு இரகசிய திருமணம் செய்து வைத்துள்ளார்.
இவரது இந்தச் செயலுக்காக மன்னர் பாதிரியாரின் தலையை வெட்டி அவரை கொலை செய்யும்படி கட்டளையிட்டார்.
எனவே பாதிரியார் வேலன்டைன் கொல்லப்பட்ட நாள் தான் பிற்காலத்தில் வேலன்டைன் டேயாக பெப்ரவரி 14 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.