
போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை எனளஅவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் (Australia Institute) சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் திட்ட பணிப்பாளர் எம்மா ஷார்டிஸ் (Emma Shortis) தெரிவித்துள்ளார்.
லெபனானில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப் போர் நிறுத்தத்தை மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பதாகவும், லெபனானில் தாக்குதல் மேற்கொள்ள
இஸ்ரேலுக்கு (Israel) தடை விதிக்கப்பட்டதாக கூறியிருந்தாலும், இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு (Netanyahu) உடனான டிரம்பின் உறவு அவரை முழுமையாக கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை என்றும் ஷார்டிஸ் அல் ஜசீரா (Al Jazeera) ஊடகத்திடம் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேலின் வலதுசாரி அரசியல் அழுத்தங்களின் காரணமாக நெதன்யாகு தனது சொந்த முடிவுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார் என்றும் கூறினார்.
ட்ரம்ப் அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருவதால், நெதன்யாகு லெபனானில் தன் விருப்பப்படி செயற்படுகிறார் என்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
