பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக பங்களாதேஸுக்கு ​சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் நேற்று டாக்​கா​வில் உள்ள ஷேர்​-இ-பங்​களா தேசிய மைதானத்​தில் நடை​பெற்​றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணி 50 ஓவர்​களில் 8 விக்கெட்​கள் இழப்​புக்கு 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹென்றி நிக்​கோல்ஸ் 68 ஓட்டங்களையும், டீன் ஃபாக்​ஸ்​கி​ராப்ட் 59 ஓட்டங்களையும், வில் யங் 30 ஓட்டங்களையும், நேதன் ஸ்மித் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேஸ் அணி தரப்​பில் தஸ்​கின் அகமது, ஷோரிபுல் இஸ்​லாம், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்​பற்​றினர்.

248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்​குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஸ் அணி 48.3 ஓவர்​களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துப்பாட்டத்தில் அதி​கபட்​ச​மாக சைஃப் ஹசன் 57 ஓட்டங்களையும், தவுஹித் ஹிர்​தோய் 55 ஓட்டங்களையும், லிட்​டன் தாஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூஸிலாந்து அணி சார்​பில் பிளேயர் டிக்​னர் 4 விக்கெட்டுகளையும், நேதன் ஸ்மித் 3 விக்​கெட்​களையும் வீழ்த்​தினர்.

26 ஒட்டங்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்டம் எதிர்வரும் 20-ம் திகதி நடைபெற உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )