Category: உலகம்

மே 3ஆம் திகதி அவஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல்

Nishanthan Subramaniyam- March 28, 2025

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் திகதி நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அறிவித்துள்ளார். தேர்தலையொட்டி ஐந்து வார பிரசாரம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகள் தேர்தல் ... Read More

செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

admin- March 27, 2025

செங்கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் சுமார் அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்திய நகரமான ஹுர்காடா கடற்கரையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சிந்த்பாத் ... Read More

விமான நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண் – ஒருவரை கடித்தும், இருவரை குத்தியும் காயப்படுத்தியுள்ளார்

Mano Shangar- March 27, 2025

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள டல்லாஸ் ஃபோர்த் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணமாக சென்ற பெண் ஒருவர் அங்கிருந்த ஒருவரை கடித்து காயப்படுத்தியதுடன், மேலும் இருவரை பென்சிலால் குத்தியும் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார். ... Read More

கார்ட்டூம் விமான நிலையத்தை துணை இராணுவத்திடமிருந்து மீட்டது சூடான் இராணுவம்

admin- March 26, 2025

சூடானின் இராணுவம், துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளிடமிருந்து (RSF) கார்ட்டூம் விமான நிலையத்தை மீட்டெடுத்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அதனை முழுமையாகப் பாதுகாத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் தலைநகரில் ... Read More

ரஷ்யா மற்றும் உக்ரைன் கடல், எரிசக்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்

Mano Shangar- March 26, 2025

கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்துள்ள பின்னணியில் இந்த ... Read More

கனடா தேர்தலில் சீனா, இந்தியா தலையீடு?

Nishanthan Subramaniyam- March 25, 2025

அடுத்த மாதம் நடைபெற உள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சிஎஸ்ஐஎஸ் எனப்படும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக ... Read More

இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது தாக்குதல் – 23 பேர் பலி

admin- March 25, 2025

இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 07 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான ஐ.நாவின் குரலை உலகம் கண்டுகொள்ளவில்லையென ஐ.நா ... Read More

உலகம் முழுவதும் அமெரிக்க தூதரகங்களில் 41 சதவீத மாணவர் விசா நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- March 25, 2025

உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் சுமார் 11 இலட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் ... Read More

நியூஸிலாந்தில் நிலநடுக்கம் : ரிக்டரில் 6.7 ஆக பதிவு

Nishanthan Subramaniyam- March 25, 2025

நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று (மார்ச் 25) காலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் ... Read More

கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்

Mano Shangar- March 24, 2025

கனடாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 28ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கனடாவின் பிரதமர் பதவியையும் ஆளும் லிபரல் கட்சியின் தலைமையையும் மார்க் ... Read More

மொகடிஷு அருகே கென்ய விமானம் விபத்துக்குள்ளானது – விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழப்பு

Mano Shangar- March 23, 2025

சோமாலியா தலைநகர் மொகடிஷுவின் தென்மேற்கே ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (SCAA) உறுதிப்படுத்தியுள்ளது. 5Y-RBA பதிவு எண் கொண்ட DHC-5D ... Read More

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு

Mano Shangar- March 23, 2025

தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேலின் ஆறு நாள் இராணுவ நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், போராளிக்குழு அதிகாரிகள் ... Read More