Category: இலங்கை

வெளிநாடுகளில் செயல்படும் தேடப்படும் குற்றவாளிகள் – நாடு கடத்த தயாராகும் அதிகாரிகள்

Mano Shangar- February 26, 2025

அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மத்தியில், வெளிநாடுகளில் செயல்படும் தேடப்படும் குற்றவாளிகளை, குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். ... Read More

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

Kanooshiya Pushpakumar- February 26, 2025

மகா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன், தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்துக்களால் இன்று கொண்டாடப்படும் மகா ... Read More

E-8 விசா பிரிவின் கீழ் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Mano Shangar- February 25, 2025

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLEB) மட்டுமே இந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று பணியகத்தின் தலைவர் கோசல ... Read More

ரணிலால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் – ராஜித சேனாரத்ன

Mano Shangar- February 25, 2025

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் நடந்த சம்பவங்களால் வருத்தமடைந்துள்ளனர் எனவும் அவர் ... Read More

நிதியை முறையாகப் பயன்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் – ஜனாதிபதி வலியுறுத்து

Mano Shangar- February 25, 2025

வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதியை உரிய பணிகளுக்கு திறம்படவும் நியாயமாகவும் பயன்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். வரையறுக்கப்பட்ட நிதி கட்டமைப்பிற்குள் கூட, இந்த ஆண்டு வரவுசெலவுத் ... Read More

அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- February 25, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று செவ்வாக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் ... Read More

மீனவர்கள் விவகாரம் : இந்திய, தமிழக அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- February 25, 2025

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் ... Read More

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை – ஜனாதிபதி நடத்திய அவசர சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 25, 2025

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான ... Read More

வடக்கில் ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ – ஆளுநர் வேதநாயகன் உத்தரவு

Nishanthan Subramaniyam- February 25, 2025

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய 'பால்நிலை கொள்கை ஆவணம்' ... Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

Kanooshiya Pushpakumar- February 25, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கொலை நடந்த புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்தவர்கள், ... Read More

11 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடையவை

Kanooshiya Pushpakumar- February 25, 2025

இவ்வாண்டின் இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும், 6 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்தவை என்றும் பொலிஸ் ... Read More

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Mano Shangar- February 25, 2025

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் (27) சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் ... Read More