விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்

விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்,

“இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு தூதுவரிடம் வலியுறுத்தினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடாவில் வாழும் சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளமையை சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.

விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என தூதர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.” என்று தூதுர் தெரிவித்தார் என அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )