ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி, மூவர் படுகாயம்

ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி, மூவர் படுகாயம்

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக முச்சக்கர வண்டி ஒன்று வீதிக்குள் நுழைய முற்பட்டது.

இதன்போது, முச்சக்கர வண்டி மீது மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This