
சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – நால்வர் கைது
அண்மையில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷனா நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவிக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் கொடூரமான செயல் என்றும், அரசாங்கம் எந்தவொரு குடிமகனின் உயிரையும் சமமாக மதிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொலை குறித்து 12 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாகவும், ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் ஆதரவை வழங்கிய நான்கு பேர் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சில எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை அமைச்சர் கடுமையாக நிராகரித்தார், மேலும் இந்த அரசாங்கம் பாதாள உலகக் கும்பல்களுக்குப் பின்னால் உள்ளது என்ற கூற்றுகளை தோல்வியடைந்த அரசியல் செயற்பாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களில் யாராலும் மாயாஜாலம் செய்ய முடியாது என்றாலும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
