பாரியளவு போதைப் பொருள் மீட்பு – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்

பாரியளவு போதைப் பொருள் மீட்பு – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்

தெற்கு கடற்கரையில் பாரிய அளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளரின் உறுப்பினர் பதவியை கட்சி இடைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அந்த நபரின் உறுப்பினர் பதவி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க தனி விசாரணை நடத்தப்படும் என்று அவர் தனது சமூக ஊடக தளமான X இல் தெரிவித்தார்.

“ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நமது சமூகத்திற்கு ஒரு புற்றுநோயான போதைப்பொருள் வர்த்தகத்தை கடுமையாக எதிர்க்கிறது.

இந்த சட்டவிரோத, கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபடுபவர்களுக்கு மிக உயர்ந்த தண்டனையை வழங்கும் வகையில் எங்கள் சட்டங்களை மறுசீரமைப்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று பிரேமதாச மேலும் கூறினார்.

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு மீன்பிடிக் கப்பலில் இருந்து ஹெராயின் மற்றும் ஐஸ் உட்பட 376 கிலோகிராம் போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

இதன் மதிப்பு நான்கு பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்களை மீட்டது தொடர்பாக பன்னலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This