இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் – சபாநாயகர் மைக் ஜான்சன்

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நண்பன் என நான் கருதுகிறேன்.
இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு அமெரிக்க முழுமையான ஆதரவளிக்கும்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரட்டத்துக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் வளங்களை வழங்கும்” என்றார்.
காஷ்மீரில் கடந்த மாதம் 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் முறுகல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.