போலியான கல்வித் தகைமையுடன் ஏராளமானவர்கள் உள்ளனர்
தற்போதைய நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளை முன்வைத்து மோசடி செய்பவர்கள் ஏராளமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
கிடைத்துள்ள தகவல்களின்படி, ஆறு போலி வைத்தியர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“படிப்பறிவில்லாதவர்கள் காணப்படும் நாடாளுமன்றத்திற்கு பதிலாக படித்தவர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதாக கூறியே, இந்த அரசாங்கம் ஆட்சியமைத்தது.
பட்டியல் ஒன்றை வெளியிட்டு, இவர்கள் படித்தவர்கள், கடின உழைப்பாளிகள், முன்னர் இருந்தவர்கள் போல் அல்ல என கூறியிருந்தனர்.
தற்போது சபாநாயகருக்கு கலாநிதி பட்டம் இல்லை.
பொய்யிலேயே வாழ்பவர்கள் இவர்கள். இது போன்று அநேகமானவர்கள் உள்ளனர். ஆறு போலி வைத்தியர்கள் உள்ளனர். ” என தெரிவித்தார்.