
மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வு
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலமைக்கு பின்னர் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் நிலங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் சேதமடைந்த நிலையில், மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, லீக்ஸ் ஒரு கிலோ 2800 ரூபாவிற்கும், கெரட் ஒரு கிலோ 2800 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 800 ரூபாவிற்கும், முள்ளங்கி ஒரு கிலோ 400 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 3000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக கமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விவசாயத் துறையின் தரநிலைகளுக்கு இணங்க உறைந்த காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
