உள்ளூராட்சி தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது.

அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் எட்டு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மார்ச் 28 ஆம் திகதி வரை, 412 தேர்தல் முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு
கிடைத்துள்ளது.

அவற்றில், 326 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் 86 தேர்தல் வன்முறை தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 32 வேட்பாளர்கள் மற்றும் 137 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 31 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Share This