இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கும் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கும் எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிய பிரதமர், இந்த முயற்சிகள் குறித்து அதிருப்தி வெளியிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“ சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் 2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பாடசாலை சீருடைத் தேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் அயராது உழைக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் எங்களின் முயற்சிகளை வீணடிக்க முயச்சிக்கின்றன.

இது இரு நாடுகளுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளும் அவர்களுடன் இணைந்துள்ள சில ஊடக நிறுவனங்களும் நமது அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள் பலவீனமானது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இருப்பினும், அத்தகைய முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டன” என்றார்.

அரசியல் நோக்கங்களைப் புரிந்துகொண்ட சீன அரசாங்கத்திற்கும் அதன் தூதுவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயமானது சர்வதேச உறவுகளை பேணுவதில் அரசாங்கம் எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.

Share This