பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு

பயிர்களுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு

அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 200,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

”சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்கள் விண்ணப் படிவத்தைப் பெற்ற நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பேரழிவுகளால் விவசாயிகளின் நிலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் மொத்தம் 1 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது” என்றார்.

Share This