வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதித்த நியூசிலாந்து

வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதித்த நியூசிலாந்து

வேட்டை நாய்களைப் பயன்படுத்தி நியூசிலாந்தில் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவது அந் நாட்டின் கலாசாரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

க்ரே ஹவுண்ட் எனப்படும் வேட்டை நாய் இன குட்டிகள் சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டு இப் பந்தயத்துக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் விலங்குகள் நல அமைப்புகள் இந்த வேட்டை நாய்கள் பந்தயத்துக்கு தடை விதிக்குமாறு போராட்டங்கள் நடத்தின.

போதைப்பொருள் கொடுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் இவை பந்தயத்துக்கு தயார்படுத்தப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் எழுந்தன.

இந்நிலையில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதிக்குமாறு புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான அமைச்சர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதிலிருந்து நியூசிலாந்தில் வேட்டை நாய் பந்தயத்துக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share This