
‘சர்வதேச புவிசார் பூங்கா’ – யுனெஸ்கோ வெளியிட்ட அறிவிப்பு
சர்வதேச அளவில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுனெஸ்கோ நிறுவனம் ‘சர்வதேச புவிசார் பூங்கா’ என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது 12 புதிய இடங்கள் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள யுனெஸ்கோ புவிசார் பூங்காக்களின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. இவை 49 நாடுகளில் பரவியுள்ளன.
இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட பூங்காக்களில் சீனாவின் ‘சாங்ஷான்’ (Changshan) மற்றும் ரஷ்யாவின் ‘தோராவ்டாவ்’ (Toratau) ஆகியவை முக்கியமானவை.
சீனாவின் சாங்ஷான் பூங்கா, ஒரு பில்லியன் ஆண்டுகால புவியியல் வரலாற்றைக் கொண்ட ஒரு இயற்கை அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.
ரஷ்யாவின் தோராவ்டாவ் பூங்கா, சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான மிகப்பெரிய பவளப்பாறைகளின் எச்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
