பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் – ஃபஸ்லுர் ரஹ்மான்

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் என பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
அவர் தனது முகப்புத்தகத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் சீனா உடன் கூட்டு இராணுவ நடவடிக்கை சார்ந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஃபஸ்லுர் ரஹ்மானின் கருத்தை எந்த வகையிலும் பங்களாதேஷ் அரசு ஆதரிக்கவில்லையென பங்களாதேஷ்
வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவரது கருத்துக்கள் பங்களாதேஷ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையோ அல்லது கொள்கைகளையோ பிரதிபலிக்கவில்லை என்றும்
அரசாங்கம் அதனை ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சீனா சென்ற பங்களாதேஷ் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடப்பதாகவும், அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் ப ங்களாதேஷ் என்றும் கூறி இருந்தார்.
மேலும், பங்களாதேஷூக்கு இருக்கும் இந்த புவியியல் நிலையைப் பயன்படுத்தி பங்களாதேஷில் சீனா பொருளாதார ரீதியாக காலூன்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முகம்மது யூனுஸின் இந்த பேச்சுக்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.