Category: சிறப்பு செய்திகள்

இலங்கை குறித்த மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் ’13’ இன் முழு அமுலாக்கம், மாகாண சபைத் தேர்தலை கோருகிறது

Nishanthan Subramaniyam- September 10, 2025

இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 60ஆவது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவிருக்கும் பிரேரணையில் இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதன் மூலம் உள்ளூர் நிர்வாகத்தை மதிக்கவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ... Read More

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழரசு கட்சி கண்டனம்

Mano Shangar- September 10, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு கடும் ஏமாற்றம் அளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. தமிழரசு கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் ... Read More

நேபாளத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Mano Shangar- September 10, 2025

நேபாளத்துக்கான அனைத்து விமானங்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நேபாளத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை நேற்று (09) இரவு ... Read More

நேபாள வன்முறை – இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை

Mano Shangar- September 10, 2025

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம், நாட்டில் உள்ள சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் பிற ... Read More

எல்ல பேருந்து விபத்து – காரணம் வெளியானது

Mano Shangar- September 10, 2025

எல்ல - வெல்லவாய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு, பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் ... Read More

மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்?

Mano Shangar- September 10, 2025

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் படி, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை ஆறு தசம் எட்டு வீதம் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் ... Read More

நாட்டின் ஜனாதிபதி அநுரவா? ரில்வினா?

Nishanthan Subramaniyam- September 10, 2025

“அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவே வெளியிடுகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முடிவுக்கு மாறான விடயங்களை அவர் அறிவிக்கின்றார். அதுவே அரசின் முடிவாக வெளிவருகின்றது. அப்படியானால் நாட்டின் ஜனாதிபதி ரில்வின் சில்வாவா?” ... Read More

பிரான்சின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு நியமனம்

Mano Shangar- September 10, 2025

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், தனக்கு மிகவும் நெருக்கமானவருமான செபஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பின்னர் புதிய பிரதமர் ... Read More

கிருஷாந்திக்கும் செம்மணிக்கும் சர்வதேச விசாரணையே நீதியை பெற்றுத் தரும்

Nishanthan Subramaniyam- September 10, 2025

இதுவரையில் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியான செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தாமல், பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி உட்பட கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி ... Read More

அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது

Nishanthan Subramaniyam- September 10, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பின் விதிகளுக்கு ... Read More

நேபாளத்தில் நடந்தது என்ன? சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!

Nixon- September 10, 2025

ஊரடங்குச் சட்டங்களுக்கு மத்தியிலும் நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கட்டுப்பாடுகளை நீக்கியது பற்றிய அறிவிப்பு திருப்திகரமாக இல்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ... Read More

பேச்சு நடைபெற்றபோது, ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

Nixon- September 10, 2025

மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோகாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த ஹமாஸ் இயக்கத் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என கட்டார் அரசு ... Read More