Category: இலங்கை
நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை – 679 சந்தேகநபர்கள் கைது
நாடு முழுவதும் நேற்றைய தினம் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் ... Read More
டிட்வா பேரிடரால் சேதமடைந்த பெய்லி பாலம் இன்று திறக்கப்பட்டது
டிட்வா புனரமைப்புக்கான இந்தியாவின் உதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. இது இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய வீதி இணைப்பை மீட்டெடுத்துள்ளது. ... Read More
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்தது
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றன. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் ... Read More
யாழில் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட ... Read More
மலையக தியாகிகள் தினம் இன்று
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று (10) கொட்டகலையில் நடைபெற்றது. பிரதான நினைவேந்தல் ... Read More
பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத கல்வி முறையை உருவாக்குவோம்
பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று ... Read More
தெஹிவளை துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் வெளியானது
தெஹிவளை, கடற்கரை வீதியில் (மெரின் டிரைவ்) அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தெஹிவளைப் ... Read More
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்த எதிர்க்கட்சி
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ... Read More
இலங்கையின் வீதி மறுசீரமைப்புக்கு சவுதி மேலதிக நிதியுதவி – 06 மில்லியன் டொலர் ஒதுக்கீடு
டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ... Read More
கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு
கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என ... Read More
பியகம பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு
பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ... Read More
கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபரினால் கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கிணங்க எத்தகைய பாரபட்சமும் ... Read More











