Category: இலங்கை
பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து – 13 பேர் வைத்தியசாலையில்
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More
மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம்
மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் இன்று (10.01.2025) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ... Read More
அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை
அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ... Read More
ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு நாடு கடத்துவது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லையா?
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியா போர் அனாதைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை நாட்டுக்கு ... Read More
மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து, மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் ... Read More
முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு, விளக்கமறியல்
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு, ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜதந்திரியான உதயங்க ... Read More
வரி குறைக்கப்பட வேண்டும் என்ற ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் அரசு
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பாரிய வரியை குறைத்து அனைத்து கல்வி பயனாளிகளுக்கும் நிவாரணம் வழங்குமாறு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு காகிதாதிகளை பெறுவதற்கு ... Read More
‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி சபைக்குப் பெரும் பங்கு – வடக்கு ஆளுநர்
"ஜனாதிபதியின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்க வேண்டும்." - இவ்வாறு வடக்கு மாகாண ... Read More
இந்தியாவிலிருந்து சிவப்பு அரிசியை இறக்குமதி செய்யும் முயற்சி தோல்வி
இந்தியாவில் சிவப்பு அரிசி கிடைக்காததால் அங்கிருந்து சிவப்பு அரிசியை இறக்குமதி செய்யும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ... Read More
தனது பணிகளை ஆரம்பித்தார் தலதா அத்துகோரள
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியின் பணிகளை ஆரம்பித்துள்ளார். இன்று சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் அவர் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்தார். ... Read More
மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ‘இராணுவத்தை அகற்று’
பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியில் உள்ள மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவில் ... Read More
உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பக்கத்து வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன், அவர் இன்று (10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். Read More












