மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பு – வவுணதீவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விவசாயக் காணியை காவல் காப்பதற்காக சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுணதீவு – நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.