இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே விசா இல்லாப் பயண ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே விசா இல்லாப் பயண ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது கையெழுத்திடப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோ (Sihasak Phuangketkeow) ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, வரலாற்று, கலாசார மற்றும் மதத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

விசா விலக்கு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் மற்றும் மக்களிடையிலான தொடர்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தாய்லாந்து துணைப் பிரதமரின் இலங்கை விஜயம், இருதரப்பு உறவுகளுக்கும் எதிர்கால ஒத்துழைப்புக்கும் புதிய உத்வேகத்தை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )