
பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரசியல் பதற்றங்களும் உலகளாவிய பொருளாதார அலைச்சல்களும் தொடர்ந்தாலும், பிரித்தானிய பவுண்ட் நாணயத்தின் மதிப்பு தற்போதைக்கு நிலைத்த தன்மையைக் காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அண்மைய பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், வெளிப்புற அழுத்தங்கள் அதிகரித்திருந்தாலும், பிரித்தானிய நாணய சந்தையில் பவுண்ட் மதிப்பு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இல்லாமல் நிலைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கான முக்கிய காரணங்களாக, பிரித்தானிய நிதி அமைப்பின் வலிமை, மத்திய வங்கியின் கட்டுப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை, மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ந்த நம்பிக்கை ஆகியவை குறிப்பிடப்படப்பட்டுள்ளன.
எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், உலக எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படும் தளம்பல்கள் ஆகியவை எதிர்காலத்தில் பவுண்ட் மதிப்பை பாதிக்கக்கூடிய அபாய காரணிகளாக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
