பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை

பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை

பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனவும், உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுங்கள் மற்றும் கைதிகளுக்கான வசதிகளை வழங்க வேண்டும் என இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அடையாள சத்யாக்கிரக போராட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறையில் சந்திரகாந்தனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவருக்கு உரிய முறையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளையாவது வழங்க வேண்டும் எனவும், வேறு சிறைக்கு அவரை மாற்றி அவருக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை தாங்கள் வரவேற்பதாகவும், சந்திரகாந்தன் குற்றம் செய்திருந்தால் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தி ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )