
இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் குறைப்பாடு
இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் முன்னாயத்த நடவடிக்கைகள் குறைவாக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
குறிப்பாக நாட்டின் இராணுவத் தயார்நிலையில் பல குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் உள்நாட்டு மதிப்பீடுகளின் படி, இங்கிலாந்து தற்போது முழுமையான போர் நிலைமையில் செயல்படுவதற்கு தேவையான சில முக்கிய திறன்களில் பின்னடைவை சந்தித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடுகளின் பிரகாரம் முக்கியமாக மூன்று பிரச்சினைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாவதாக, போர் தயார்நிலை குறைவாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவசர காலங்களில் விரைவாக பதிலளிக்கும் திறனில் இடைவெளிகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, சில முக்கிய ஆயுத வகைகள் மற்றும் குண்டு கையிருப்பில் தட்டுப்பாடு இருப்பதாகவும், நீண்டகால போர்ச் சூழ்நிலைக்கு இது சவாலாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, பாதுகாப்புத் துறையின் நிதி வளங்கள் அதிகரிக்கப்பட்டாலும், தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய அது போதாது எனவும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிபுணர்கள், உலகளாவிய அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து தனது பாதுகாப்பு அமைப்பை விரைவாக வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என வலியுறுத்தியுள்ளனர்.
