
மத்திய மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள்
மத்திய மாகாணத்தில் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கண்டி ஆளுநர் செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பீ.எஸ்.அபயகோன் தலைமையில் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது இலங்கை அதிபர் சேவைக்கென 27 பேருக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
