
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றதா?
நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய ட்ரம்ப், பிரித்தானியாவிடம் ஒரு கடற்படை கூட இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
நான் ஒருபோதும் நேட்டோவால் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் ஒரு காகிதப்புலி என்பது எனக்கு எப்போதோ தெரியும், அது ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் நன்கு தெரியும் என விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தொடர்ந்தும் ஹார்முஸ் நீரிணையை மூடி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அந்த நீரிணையை திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ நாடுகளின் உதவியை கோரியிருந்தார்.
இந்நிலையில் அவரது அழைப்பை நேரடியாகவே நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், ட்ரம்ப் நேட்டோ நாடுகளை இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
