சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை

சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை

எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியன் எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனிக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் 02.04.2026 முதல் 15.04.2026 வரை இலங்கையின் பல பகுதிகளிலும் அளவிடப்படும் நாளுக்கான சராசரி வெப்பநிலை 38-42 பாகை செல்சியஸ் ஆக நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையான வெப்பநிலை இவ்வாறிருக்க உணரக்கூடிய வெப்பநிலை 48 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.

பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸை்விட அதிக வெப்பநிலையை தாங்காது. இது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும்.

40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை( Heat Stroke) ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால் எதிர்வரும் நாட்களில் (02.04.2026 முதல் 15.04.2026)வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.

-புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )