புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு

புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு

புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, “நேயம் மக்கள் கழகம்” நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி சட்டமன்ற உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )