
ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு
ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறக்க நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியிருந்த நிலையில், பிரித்தானியா மறுப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஹர்முஸ் நீரிணைக்கு கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மறுப்பு வெளியிட்டுள்ளதாக தி டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.
ஹர்முஸ் நீரிணை பகுதிக்கு போர்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நிராகரித்துள்ளார் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பிரித்தானியா தயாராக இல்லை என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் டிரம்பிடம் கூறியதாக தி டெய்லி டெலிகிராஃப் கூறியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறக்க சீனா உட்பட உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை உதவி கோரியிருந்தார்.
சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் ஹார்முஸ் நீரிணைக்கு தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை கொண்டிருந்தார்.
எவ்வாயினும், ட்ரம்பின் கோரிக்கைக்கு உலக நாடுகள் அமைதி காத்துள்ளதுடன், ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக மறுப்பு தெரிவித்துள்ளன.
மேலும் சீனாவும் டிரம்பின் கோரிக்கை குறித்து அமைதி காத்து வருகின்றது.
ட்ரம்பின் கோரிக்கையை ஆய்வு செய்து வருவதாக தென் கொரியா கூறியுள்ள நிலையில், பிரான்ஸ் ஏற்கனவே தனது கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்ப மறுத்துவிட்டது.
இந்நிலையில், ஹர்முஸ் நீரிணைக்கு கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மறுப்பு வெளியிட்டுள்ளதாக தி டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.
