
ஈரானின் தப்ரிஸ் நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு – உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரிக்கை
மேற்கு ஈரானின் தப்ரிஸ் (Tabriz) நகரில் உள்ளவர்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த பகுதியில் அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக, உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் தங்கினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
