பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்

பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )