
காதலனுக்கு தேநீர்கொண்டு வந்த காதலி கைது
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த பால் தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொண்டு வந்த உணவில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அளவிலான போதைப்பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (22) மதியம் அவரது காதலி என்று கூறப்படும் சந்தேக நபர் இளைஞரைப் பார்க்க சென்றுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் அனுமதியுடன், சிறிது நேரம் அந்த இளைஞருடன் உரையாடிய பின்னர், தேநீர் மற்றும் சாண்ட்விச் கொண்ட ஒரு சிறிய பையுடன் அந்தப் பெண் பொலிஸ் நிலையத்திற்கு வந்தார்.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் கொண்டு வந்த சாண்ட்விச் மற்றும் தேநீரை பரிசோதித்தபோது, தேநீரில் போதைப்பொருள் இருப்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
