
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி ஆதரவு
இலங்கை முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பரவலான அழிவுகளைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு தனது கடிதம் எழுதியுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஜனாதிபதி புடின், தனது செய்தியில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவையும் தெரிவித்தார்.
“இலங்கையை தாக்கிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட ஏராளமான மனித உயிரிழப்புகள் மற்றும் விரிவான அழிவுகளுக்கு எனது உண்மையான அனுதாகபங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதே போல் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
