காலி மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – மகாதுர நளின் வசந்தவின் சகோதரி உயிரிழப்பு

காலி மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – மகாதுர நளின் வசந்தவின் சகோதரி உயிரிழப்பு

காலி மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் உணவகம் ஒன்றில் நுழைந்து நேற்று (17) இரவு நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உணவக உரிமையாளரும் கரந்தெனிய சுத்தாவின் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாதுர நளின் வசந்தவின் சகோதரியான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராஜமெதுர வீதி தம்பஹிட்டிய மீடியகொடவைச் சேர்ந்த 47 வயதுடைய ரோசி என அழைக்கப்படும் மகாதுர ரோசிகா ஷமீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் சீன உணவகம் நடத்தி வரும் உரிமையாளரான பெண், சம்பவ தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் உணவகத்தில் இருந்துள்ள போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த பெண்ணை பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பெண், 03.05.2025 மீடியாகொடவில் உள்ள உணவகத்தில் கரந்தெனிய சுத்தாவின் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாதுர நளின் வசந்தவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது

Share This