புறக்கோட்டை தீ விபத்து – விசேட குழு நியமனம்

கொழும்பு புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
மின் உபகரண விற்பனை நிலையத்தின் நான்காவது மாடியில் நேற்று (20) மாலை தீ பரவல் ஏற்பட்டது. இதன் பின்னர் அருகிலிருந்த மற்றுமொரு கட்டிடத்திலும் தீ பரவியது.
பின்னர் 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர், பொலிஸார், கடற்படையினர் மற்றும் துறைமுகத்தின் தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்டோர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சுமார் 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.