காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்னர்.
இந்த தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய படைகள் காசாவில் 91 பலஸ்தீனியர்களை கொலை செய்த நாளிற்கு பிறகு இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் வைத்தியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நால்வர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாகஇதுவரை 65,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 166,271 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.