ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 303 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.