
மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடத்தப்படாது – நளிந்த
மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடத்தப்படாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாணந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“அரசாங்கம் எல்லா நேரங்களிலும் தேர்தல்களை நடத்த முடியாது, ஆனால் வளர்ச்சித் திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளது.
சில சட்டங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளதாலும் நாட்டின் வளர்ச்சிக்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாலும், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது” என்றார்.
CATEGORIES இலங்கை
