துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 47 பேர் பலி

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 21 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.