2026 சட்டமன்ற தேர்தல் –  ஆட்சேர்ப்பில் தீவிரம் காட்டும் த.வெ.க

2026 சட்டமன்ற தேர்தல் – ஆட்சேர்ப்பில் தீவிரம் காட்டும் த.வெ.க

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க வில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

த.வெ.க வில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் இணைவதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும் முதற்கட்டமாக கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டதுடன்
குறிப்பிட்ட காலத்துக்குள் கட்சிக்கு 02 கோடி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு த.வெ.க. தலைவர் விஜய் இலக்கு நிர்ணயித்தார்.

இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கைக்கென தனி சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

கட்சியில் இணைந்தவர்கள் பட்டியலில் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கென ஏற்கனவே மாநில அளவில் நிர்வாகிகள் நியமனம்  செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This